எங்களைப் பற்றி

முன்னுரை

​திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், நேமம் ஆண்டர்சன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த M. முனுசாமி - M. ருக்மணியம்மாள் தம்பதியருக்கு ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள் என மொத்தம் எட்டு பிள்ளைகள். அவர்களுள் மூன்றாவது மகனே நமது நிறுவனத் தலைவர் மூர்த்தி அவர்கள் (எட்டாவது பிள்ளைதான் ஜெகன் மூர்த்தி) அவர்கள்

​ஆரம்பக் கல்வியும் திறமைகளும்

​தனது ஐந்து வயதில் ஆண்டர்சன்பேட்டை அரசு ஆரம்பப் பள்ளியில் சேர்ந்த மூர்த்தி, ஐந்தாம் வகுப்பு வரை வகுப்பின் சிறந்த மாணவனாகத் திகழ்ந்தார். ஆறாம் வகுப்பு முதல் திருமழிசையில் உள்ள சுந்தர முதலியார் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் படித்து OLD S.S.L.C வரை தேர்ச்சி பெற்றார். கல்வியிலும் விளையாட்டிலும் திறம்படச் செயல்பட்டு, ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றதோடு வகுப்புத் தலைவராகவும் (Class Leader) விளங்கினார்.

​பின்னர் பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரியில் P.U.C பயின்றார். அங்கேயும் கல்வியில் சிறந்து விளங்கி மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியில் B.A. பொருளாதாரம் பயின்றார். பொருளாதாரப் படிப்பில் சிறந்த மாணவராக விளங்கியதோடு, கல்லூரி வளர்ச்சிக்கும் மாணவர் நலனுக்கும் பல போராட்டங்களை முன்னெடுத்தார். இதனால் அனைத்துக் கல்லூரி மாணவர்களின் அன்பையும் பெற்ற தலைவராக உருவெடுத்தார்.