சமூக விழிப்புணர்வும் இயக்கத்தின் தொடக்கமும்
M.A. பொருளாதாரம் பயில தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கலைக் கல்லூரியில் சேர்ந்தபோது, அங்கு நிலவிய சாதியக் கொடுமைகளையும் தீண்டாமையையும் நேரில் கண்டார். கிராமப்புறங்களில் வாழும் ஏழை ஆதிதிராவிட மக்கள் படும் துயரங்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்று உறுதிகொண்டார்.
மாணவர்களையும் நண்பர்களையும் ஒருங்கிணைத்து ஒரு அமைப்பாகப் போராட முடிவு செய்தார். இதன்படி, 1978-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி பூந்தமல்லி மேல்மாநகரில் உள்ள ஆதிதிராவிட ஆரம்பப் பள்ளி மைதானத்தில் 'டாக்டர் அம்பேத்கர் மன்றம்' என்ற அமைப்பைத் தொடங்கி உரையாற்றினார். அவரின் வீரியமிக்க உரையைக் கேட்ட பொதுமக்கள், "இனி அநீதி நடக்கும் இடங்களிலெல்லாம் மூர்த்தியும் இந்த மன்றமும் இருக்கும்" என்று உற்சாகத்துடன் அவரை ஏற்றுக்கொண்டனர். அன்றுமுதல் மக்கள் அவரை அன்போடு 'பூவை மூர்த்தி' என்று அழைக்கத் தொடங்கினர்.
சட்டப் போராட்டமும் பஞ்சமி நில மீட்டப்பும்
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடியவர், சட்டரீதியாகப் போராட விரும்பி சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். சட்டத்தின் துணையோடு ஏழை மக்களுக்குப் பல உரிமைகளைப் பெற்றுத் தந்தார்.
குறிப்பாக, விக்டோரியா அரசியாரால் வழங்கப்பட்டும் ஆக்கிரமிப்பில் இருந்த பஞ்சமி நிலங்களைத் தேடிக் கண்டுபிடித்து, நிலமற்ற ஏழை மக்களுக்கு வீட்டு மனைகளாகப் பெற்றுத் தந்தார். ஏழை மாணவர்களைப் பள்ளிகளிலும் சட்டக் கல்லூரிகளிலும் சேர்க்க உதவினார். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கினார்.
கட்சித் தொடக்கமும் மூவர்ணக் கொடியும்
டாக்டர் அம்பேத்கர் மக்கள் மன்றம்', 'டாக்டர் அம்பேத்கர் மக்கள் முன்னணி' எனப் படிப்படியாக வளர்ந்த இந்த இயக்கம், அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பணியாற்றும் நோக்கத்துடன் 1998-ஆம் ஆண்டு 'புரட்சி பாரதம்' என்ற அரசியல் கட்சியாக பரிணமித்தது.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நீலம், வெள்ளை, சிவப்பு நிறங்களுடன், நடுவில் அசோக சக்கரத்தைக் கொண்ட மூவர்ணக் கொடியைக் கட்சியின் அடையாளமாக உருவாக்கினார். தேர்தல் களத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, வெற்றியைத் தீர்மானிக்கும் கணிசமான வாக்குகளைப் பெற்று ஏழை மக்களின் நம்பிக்கை நாயகனாகத் திகழ்ந்தார்.
சமூக நல்லிணக்கமும் முக்கிய சாதனைகளும்
வட மாவட்டங்களில் வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குமிடையே நிலவிய சாதி மோதல்களைத் தடுத்து, இரு சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ விரும்பினார். இதற்காகச் சென்னை தி.நகர் பனகல் பூங்காவில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களைப் பங்கேற்கச் செய்து மாநாடு நடத்தினார்.
மேலும், பின்வரும் கோரிக்கைகளுக்காகப் பட்டினிப் போராட்டம், கண்டனக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தி, அன்றைய முதலமைச்சரிடம் மனு அளித்து வெற்றியைச் சாத்தியமாக்கினார்: