தொலைநோக்கு

[2:03 pm, 06/08/2026] chanther: டாக்டர் அம்பேத்கருக்கு மணிமண்டபம் அமைத்தல்.

​சென்னை அரசு சட்டக் கல்லூரிக்கு 'டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி' எனப் பெயர் சூட்டுதல்.

​தொடர்ந்து, சென்னை சீரணி அரங்கத்தில் த.மா.கா தலைவர் ஜி.கே. மூப்பனார் அவர்களை வைத்து மாநாடு நடத்தினார். பின்னர் அரக்கோணத்தில் அன்றைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தலைமையில், சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைத் திரட்டி பிரம்மாண்ட மாநாட்டை நடத்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பிற்கான பல்வேறு சலுகைகளைப் பெற்றுத் தந்தார்.

ஈடுசெய்ய முடியாத இழப்பு

மக்களுக்காகவே ஓயாது களப்பணியாற்றியதால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். தனது உடல்நலத்தைப் பற்றியோ, திருமண வாழ்க்கை பற்றியோ, சுயநலம் பற்றியோ சிறிதும் சிந்திக்காமல் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடியலுக்காகவே இறுதிவரை உழைத்தார்.

​போராட்டக் குணமிக்க களப்போராளி பூவை மூர்த்தியார் அவர்கள், 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி நம்மைப் பிரியாத் துயரில் ஆழ்த்தி இயற்கை எய்தினார்.

​முடிவுரை

இயக்கம் தொடங்கி 40 ஆண்டுகளைக் கடந்துள்ள இந்த வேளையில், எத்தனையோ கூட்டங்கள், களப்போராட்டங்கள், சாதி மோதல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் வெற்றிகள் நம் கண்முன்னே நிழலாடுகின்றன. பல ஆவணங்கள் காலப்போக்கில் சிதைந்துபோயிருந்தாலும், கிடைத்த சான்றுகளைக் கொண்டு புரட்சி பாரத கட்சியின் வரலாற்று நிகழ்வுகள் இந்தச் சிறப்பு மலரில் பொக்கிஷமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

எத்தனையோ இயக்கங்கள் தோன்றி மறைந்த சூழலில், நிறுவனத் தலைவர் டாக்டர் பூவை மூர்த்தியாரால் தொடங்கப்பட்ட இக்கட்சி, பல கரடுமுரடான பாதைகளைக் கடந்து இன்று 49 ஆண்டுகளை நிறைவு செய்து அரை நூற்றாண்டை நோக்கி வெற்றிநடை போடுகிறது.
[4:33 pm, 06/08/2026] Veeravikas: please